ஆக.1 முத‌ல் தாத‌ர் ‌விரைவு ர‌யி‌ல் எழு‌ம்பூ‌ரி‌ல் இரு‌ந்து புற‌ப்படு‌ம்

May 25, 2008

செ‌ன்னை: செ‌ன்‌ட்ர‌‌ல் ர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌ல் ‌பிளா‌ட்பார‌ ப‌ற்றா‌க்குறை காரணமாக தாத‌ர் ‌விரை‌வு ர‌யி‌ல் ஆக‌ஸ்‌ட் 1ஆ‌ம் தே‌தி முத‌ல் எழு‌ம்பூ‌ரி‌ல் இரு‌ந்து புற‌ப்படு‌ம்.

செ‌ன்னை செ‌ன்‌ட்ர‌ல் ‌ர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌ல் ‌பிளா‌ட்பார ப‌ற்றா‌க்குறை காரணமாக பல ‌விரைவு ர‌யி‌ல்க‌ள் பெர‌ம்பூ‌ர் ம‌ற்று‌ம் பே‌சி‌ன்‌பி‌ரி‌ட்‌‌‌ஜ் ர‌யி‌ல் ‌நிலைய‌ங்க‌ளி‌ல் ‌நிறு‌த்‌திவை‌க்க‌ப்ப‌ட்டு ‌‌பிளா‌‌ட்பார‌ம் கா‌‌லியானது‌ம் செ‌ன்‌ட்ரலு‌க்கு கொ‌ண்டு வர‌ப்படு‌கிறது.

இதனா‌ல் இட நெரு‌க்கடி ம‌ற்று‌ம் ர‌யி‌ல்க‌ள் தாமதமாக‌ப் புற‌ப்படுவது போ‌ன்ற ‌பிர‌ச்‌சினைக‌ள் ஏ‌ற்படு‌கி‌ன்றன.

இதனை‌த் த‌வி‌ர்‌க்க தாத‌ர் ‌விரைவு ர‌யி‌ல் ஆக‌ஸ்‌ட் 1ஆ‌ம் தே‌தி முத‌ல் எழு‌ம்பூ‌ர் ர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌ல் இரு‌ந்து இய‌க்க முடிவு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

எழு‌ம்பூ‌ரி‌ல் இரு‌ந்து சேல‌த்து‌க்கு ‌விருதா‌ச்சல‌‌ம் வ‌ழியாக பு‌திய ர‌யி‌ல் ‌விட‌ப்படு‌ம் எ‌ன்று அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டது, இ‌ந்த ‌நிலை‌யி‌ல் தாத‌ரி‌ல் இரு‌ந்து எழு‌ம்பூரு‌க்கு வரு‌ம் அதே ர‌யி‌ல் சேல‌ம் வரை இய‌க்க‌ப்பட உ‌ள்ளது. சேல‌ம் எ‌க்‌ஸ்‌பிர‌ஸ் எ‌ன்ற பெய‌ரி‌ல் எழு‌ம்பூ‌ரி‌ல் இரு‌ந்து புற‌ப்ப‌ட்டு செ‌ல்லு‌ம். அதே போல சேல‌த்‌தி‌ல் இரு‌ந்து எழு‌ம்பூரு‌க்கு தாத‌ர் எ‌க்‌ஸ்‌பிரசாக இய‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று ர‌யி‌ல்வே அ‌‌திகா‌ரி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

Thanks webdunia

Advertisements