புருணை சுல்தானின் சகோதரரான இளவரசர் ஜெப்ரி போல்கியா பிரிட்டிஷ் நீதிமன்றத்திற்கு வரத் தவறினார்.
அவர் சம்பந்தப்பட்ட ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின்போது ஜெப்ரி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அவர் நீதிமன்றத்திற்கு வரத் தவறியதைத் தொடர்ந்து அவரைக் கைது செய்ய பிரிட்டிஷ் நீதிமன்றம் பிடி ஆணை உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் ஜெப்ரி போல்கியா, “ நான் நீதிமன்றத்திற்கு வராததால், நீதிமன்றத்தையோ அல்லது பிரிட்டனையோ நான் அவமதித்ததாகக் கருதக்கூடாது” என்று கூறியிருக்கிறார்.
தன் சகோதரருடன், பிரச்சினைக்குத் தீர்வு காணத் தவறியதால் நீதிமன்றத்திற்கு வரமுடியவில்லை என்று அவர் கூறினார்.
$8.1 பில்லியன் மதிப்புள்ள ரொக்கம் மற்றும் சொத்துகளை புருணை முதலீட்டு நிறுவனத்திடம் ஜெப்ரி ஒப்படைக்க வேண்டும் என்ற நீதிமன்ற விதிமுறைகளை மீறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஈராண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
நன்றி தமிழ் முரசு