ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் 3 ஆயிரம் இந்தியத் தொழிலாளர்கள் விடுதலை

July 18, 2008

துபாய், ஜுலை.18-

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் ராஸ் அல் கைமாக் நகரில் ஒரு கட்டுமான கம்பெனியில் வேலை பார்த்த இந்திய தொழிலாளர்கள் தாங்கள் தங்க வைக்கப்பட்டு உள்ள குடியிருப்பில் மோசமான உணவு வழங்கப்படுவதை எதிர்த்தும் அங்கு உள்ள வசதிக்குறைவுகளை கண்டித்தும் வன்முறைப் போராட்டத்தில் குதித்தனர். அவர்களில் 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் இந்த மாதத் தொடக்கத்தில் நடந்தது. கைது ஆனவர்கள் அனைவரும் நேற்று துபாய் சிறையில் இருந்தும், அபுதாபி சிறையில் இருந்தும் விடுதலை ஆனார்கள்.

அவர்களை அழைத்து வருவதற்காக கட்டுமான கம்பெனியின் 50 பஸ்கள் சிறைவாசலில் நின்று இருந்தன. அவர்கள் விரைவில் வேலையில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து தொழிலாளர்களையும் மீண்டும் வேலைக்கு எடுத்துக்கொள்ள கம்பெனி விரும்புகிறது என்று கம்பெனி அதிகாரிகள் இந்தியத்தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

அவர்களில் 8 பேர் மட்டும் விடுதலை செய்யப்படவில்லை. அவர்களில் ஒருவர் வங்காளதேசத்தைசேர்ந்தவர் ஆவார். அவர்கள் தொடர்ந்து சிறையில் இருப்பார்கள் என்று தெரிகிறது.

லால்பேட்டை இணைய தளம்

நன்றி தினத் தந்தி

Advertisements

கம்ப்யூட்டரிலிருந்து செல்போனுக்கு ஒரே நேரத்தில் லட்சம் பேருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பும் முறையை செம்பட்டி வாலிபர் கண்டுபிடிப்பு

July 18, 2008

செம்பட்டி,ஜுலை.18-

கம்ப்ïட்டரில் இருந்து செல்போனுக்கு ஒரே நேரத்தில் லட்சம் பேருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பும் முறையை செம்பட்டி வாலிபர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

ஒரு லட்சம் பேருக்கு எஸ்.எம்.எஸ்.

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில்லோகா கம்யூனி கேசன் உரிமையாளர் நா.மகேஸ் வரன், எம்.ஏ., பட்டதாரியான இவர் செம்பட்டியில் எஸ்.டி.டி. பூத் மற்றும் டிïசன் சென்டர் நடத்தி வருகிறார். இவர் கம்ப்யூட்டரிலிருந்து செல்போனுக்கு ஒரே நேரத்தில் லட்சம் பேருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பும் புதியமுறையே கண்டுபிடித்துள்ளார். பெரும்பாலும் ஒருவருகëகு தகவல் அனுப்ப வேண்டு மென்றால், ஒருவர் செல்லிலிருந்து தகவலை டைப் செய்து மற்றொருவர் செல்லுகëகு அனுப்பலாம். ஆனால் ஒரு தகவலை ஒரே தடவையில் குறிப்பிட்ட நபர்களுக்கு மேல் அனுப்ப முடியாது. இந்த தகவல் அனுப்பும் முறை செல் டூ செல் மட்டும் அனுப்ப முடியும். ஆனால் கம்ப்ïட்டரிலிருந்து முதல் முறையாக செல் போனுகëகு ஒரே நேரத்தில் லட்சம் பேருக்கு தகவல் அனுப்பும் முறையை கண்டுபிடித்துள்ள செம்பட்டி வாலிபர் மகேஸ்வரனை சந்தித்த போது அவர் கூறியதாவது:-

கம்ப்ïட்டரில் பதிவு

இண்டர்நெட் இணைப்பு உள்ள கம்ப்யூட்டரில் ஏதாவது ஒரு ஐடி ஓப்பன் செய்து அதில் நாம் யார் யாருகëகு தகவல் அனுப்புகின்றோமே அவர்களின் செல் நம்பர்களை (ஒரு லட்சம் பேர் வரை அல்லது அதற்க்கு மேலும் கூட) கம்ப்ïட்டரில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் என்ன தகவல் அனுப்புகிறோமோ அந்த விவரங்களை டைப் செய்து ஓகே கொடுத்தவுடன் அனைத்து நபர்களுக்கும் ஒரே நேரத்தில் சென்றடைந்து விடும். இந்த முறையை கல்லூரிகள், பெரிய கம்பெனிகள், தனியார் பள்ளிகள், தொழிற்சாலைகள் பயன்படுத்தலாம்.

ஒரே நேரத்தில்

உதாரணமாக கல்லூரியில் படிகëகும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்களின் செல் நம்பர்களை நிர்வாகம் வாங்கி வைத்து கொண்டு கல்லூரி விடும் நேரம், விடுமுறை மற்றும் முக்கிய தகவல்களை ஒரே நேரத்தில் அவர்களுக்கு அனுப்பலாம்.

இதன் மூலம் மாணவர்கள் பெற்றோர்களை ஏமாற்ற முடியாது. 5 நிமிடத்தில் தெரிவிக்கிற தகவலை லட்சம் பேருக்கு ஒரே நேரத்தில் தெரிவிக்கலாம். எனது கண்டு பிடிப்பை மாவட்ட கலெக்டர், மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு செய்து காண்பிக்க உள்ளேன்.

இவ்வாறு மகேஸ்வரன் கூறினார்.

லால்பேட்டை இணைய தளம்

நன்றி தினத் தந்தி

உலகின் டாப் இருபது அறிவாளிகள் பட்டியலில் இரண்டு இந்தியர்கள்

July 5, 2008

நியூயார்க் : உலகின் தலைசிறந்த இருபது அறிவாளிகளின் பட்டியலை நியூயார்க் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது. இதில் இரண்டு இடங்களை இந்தியர்கள் பிடித்துள்ளனர். அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான பாரின் பாலிசி- உலகின் தலைசிறந்த 20 அறிவாளிகள் பட்டியலை தங்கள் வாசகர்கள் அளித்த ஆன்லைன் வாக்குகளின் அடிப்படையில் தேர்ந்தெடுத்துள்ளது. இந்த தரவரிசையில் இந்தியாவை சேர்ந்த நோபெல் பரிசு பெற்ற அமர்தியாசென்னும்இ நியூஸ் வீக் பத்திரிகையின் பதிப்பாசிரியர் பரீத்ஜக்காரியாவும் முறையே 16 மற்றும் 17வது இடத்தை பிடித்துள்ளனர். முதலிடத்தை துருக்கியை சேர்ந்த இஸ்லாமிய நிபுணர் பத்துல்லா குல்லென் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்ற பிரபலங்களில் சிலரது பெயர்கள் வருமாறு : அமெரிக்க துணைஜனாதிபதி அல்கோர்இ செஸ் வீரர் கேரிகாஸ்பரோவ் மற்றும் அமெரிக்க வெளியுறவு கொள்கைகளின் விமர்சகர் நவோம்சாம்ஸ்கி.

லால்பேட்டை இனைய தளம்

நன்றி தினமலார்

கடந்த 60 ஆண்டுகளாக சீனாவுக்கும் தைவானுக்குமிடையே இல்லாமல் இருந்த விமான போக்குவரத்து நேற்று மீண்டும் துவங்கப்பட்டது.

July 4, 2008


பெய்ஜிங் : கடந்த 60 ஆண்டுகளாக சீனாவுக்கும் தைவானுக்குமிடையே இல்லாமல் இருந்த விமான போக்குவரத்து நேற்று மீண்டும் துவங்கப்பட்டது. முதல் விமானம் தெற்கு சீனாவில் இருக்கும் குவாங்ஜோவ் என்ற நகரில் இருந்து தைவான் தலைநகர் தைபே விமான நிலையத்தை சென்று அடைந்தது. சீனாவுக்கும் தைவானுக்குமிடையே வாரத்தில் 36 விமானங்கள் ( வெள்ளியில் முதல் திங்கள் வரை மட்டும் ) இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் விமானத்தில் 100 சுற்றுலா பயணிகள் உள்பட 250 பேர் பயணம் செய்தனர். 1949 ம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டு போரினால் இரு நாடுகளும் தனித்தனியாக பிரிந்தன. அதன் பின் இரு நாடுகளுக்குமிடையே நேரடி விமான போக்குவரத்து இல்லாமல் இருந்தது. சீனாவில் இருந்து தைவானுக்கு போகவேண்டும் என்றால் வேறு நாடு வழியாகத்தான் போகவேண்டும் என்ற நிலைதான் கடந்த 60 வருடங்களாக இருந்தது. சில முக்கிய விடுமுறை நாட்களில் மட்டும் நேரடி விமானம் இயக்கப்பட்டது. கடந்த மே மாதத்தில் தைவானின் புதிய அதிபராக யிங் – ஜியோவ் பொறுப்பேற்ற பின் சீனாவுடனான உறவில் முன்னேற்றம் காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இப்போது நேரடி விமான சர்வீஸ் துவங்கப்பட்டுள்ளது.

லால்பேட்டை இனைய தளம்

நன்றி தினமலர்

கடலூர் மாவட்டத்தில் அனைத்து தொலைபேசி இணைப்பகங்களுக்கும் பிராட் பேண்ட் வசதி பி.எஸ்.என்.எல்.பொதுமேலாளர் ராஜேந்திரன் தகவல்

June 17, 2008

கடலூர், ஜுன்.17-

கடலூர் மாவட்டத்தில் அனைத்து தொலைபேசி இணைப்பகங்களுக்கும் `பிராட்பேண்ட்` வசதி கொடுக்கும் பணி நடைபெற்று வருவதாக பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் ராஜேந்திரன் கூறினார்.

பேட்டி

தமிழ்நாடு சர்க்கிளில் மாதந்தோறும் ஒரு லட்சம் பிராட்பேண்ட் இணைப்பு கொடுக்க திட்டமிட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்திலும், இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக கடலூர் தொலைதொடர்பு மாவட்ட பி.எஸ்.என்.எல்.பொதுமேலாளர் ராஜேந்திரனிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:-

`பிராட்பேண்ட்` வசதி

கடலூர்-விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள நகர்புறங்களில் பிராட்பேண்ட் வசதி உள்ளது. இதுவரை 4 ஆயிரத்து 500 பேர் பிராட்பேண்ட் இணைப்பு பெற்று உள்ளனர். இதுதவிர கூடுதலாக 400 பேர் இணைப்பு கேட்டு காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

கிராமப்புறங்களில் உள்ள தொலைபேசி இணைப்பகங்களுக்கு உள்பட்ட கிராமங்களுக்கும் பிராட்பேண்ட் இணைப்பு கொடுப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த இரு மாவட்டங்களிலும் 126 கிராமப்புற தொலைபேசி இணைப்பகங்கள் உள்ளன. இவற்றில் ஓரிரண்டு இணைப்பகங்களுக்கு பிராட்பேண்ட் வசதி கொடுக்கப்பட்டு விட்டது. மற்ற இணைப்பகங்களுக்கும் பிராட்பேண்ட் வசதி கொடுப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.

செல்போன் கோபுரங்கள்

புதிதாக 80 செல்போன் கோபுரங்கள் அமைக்க உள்ளோம். இப்போது 126 செல்போன் கோபுரங்கள் உள்ளன. இன்னும் 2 மாதங்களுக்குள் புதிய செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டு விடும். இதுதவிர மேலும் 120 செல்போன் கோபுரங்கள் அமைக்க அனுமதி கிடைத்து உள்ளது. இவற்றை எந்தெந்த ஊர்களில் அமைக்கலாம் என்று சர்வே செய்து வருகிறோம்.

இவ்வாறு பொதுமேலாளர் ராஜேந்திரன் கூறினார்.


ஒரிசாவில் அதிசயம் 40 நாள் இடைவெளியில் பிறந்த இரட்டை குழந்தைகள்

June 15, 2008

  பெர்காம்பூர், ஜூன் 16: ஒரிசாவில் முதல் குழந்தை பிறந்து 40 நாட்கள் கழித்து 2வது குழந்தை பிறந்துள்ளது.

ஒரிசா மாநிலம் பெர்காம்பூர் மாவட்டம் கேந்துபாதர் பகுதியை சேர்ந்தவர் தபலேஷ்வர் பத்ரா. இவரது மனைவி பபினா பத்ரா(25).கர்ப்பம் அடைந்த பபினாவுக்கு ஸ்கேன் சோதனை செய்து டாக்டர்கள் பார்த்த போது, அவரது வயிற்றில் இரட்டை குழந்தைகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

கடந்த ஏப்ரல் 27ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை 1.3கி எடை இருந்தது. சாதாரணமாக இரட்டை குழந்தை என்றால், அதிகபட்சமாக 1 மணி நேர இடைவெளியில் பிறந்துவிடும். ஆனால், பபினாவின் வயிற்றில் இருந்த மற்றொரு குழந்தை, முழுமையாக வளர்ச்சியடையவில்லை.

இதனால், அந்த குழந்தை பிறப்பதற்கு குறைந்தது ஒரு மாதமாகும் என்று டாக்டர்கள் அறிந்தனர். இதையடுத்து, மருத்துவமனையிலேயே பபினாவை தங்க வைத்து சிகிச்சையளித்தனர். சரியாக முதல் குழந்தை பிறந்து40 நாட்கள் கழித்து பபினாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை 2கி எடை இருந்தது.

இது பற்றி பபினாவுக்கு சிகிச்சையளித்த டாக்டர் மொகந்தி கூறுகையில்,Ôஇரட்டை குழந்தைகள் இரு வகை உண்டு., மருத்துவ அறிவியலில் இதற்கு Ôயூனி ஓவுவர்Õ, Ôபை ஓவுலர்Õ என்று பெயர். பை ஓவுலர் பிரிவை சேர்ந்த 2 குழந்தைகள் என்றால், ஒன்று அல்லது 2 நாள் வித்தியாசத்தில் பிறக்க வாய்ப்புள்ளது.

எனினும் 40 நாள் என்பது மிகவும் அதிகம்தான். ஆனால், பை ஓவுலர் இரட்டை குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும்Õ என்றார். பபினாவின் இரண்டு குழந்தைகளும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் டாக்டர் தெரிவித்தார்.

நன்றி தினகரன்

லால்பேட்டை இனைய தளம்

 


புருணை சுல்தானின் சகோதரரைக் கைது செய்ய பிடி வாரன்ட்

June 15, 2008

புருணை சுல்தானின் சகோதரரான இளவரசர் ஜெப்ரி போல்கியா பிரிட்டிஷ் நீதிமன்றத்திற்கு வரத் தவறினார்.
அவர் சம்பந்தப்பட்ட ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின்போது ஜெப்ரி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அவர் நீதிமன்றத்திற்கு வரத் தவறியதைத் தொடர்ந்து அவரைக் கைது செய்ய பிரிட்டிஷ் நீதிமன்றம் பிடி ஆணை உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் ஜெப்ரி போல்கியா, “ நான் நீதிமன்றத்திற்கு வராததால், நீதிமன்றத்தையோ அல்லது பிரிட்டனையோ நான் அவமதித்ததாகக் கருதக்கூடாது” என்று கூறியிருக்கிறார்.
தன் சகோதரருடன், பிரச்சினைக்குத் தீர்வு காணத் தவறியதால் நீதிமன்றத்திற்கு வரமுடியவில்லை என்று அவர் கூறினார்.
$8.1 பில்லியன் மதிப்புள்ள ரொக்கம் மற்றும் சொத்துகளை புருணை முதலீட்டு நிறுவனத்திடம் ஜெப்ரி ஒப்படைக்க வேண்டும் என்ற நீதிமன்ற விதிமுறைகளை மீறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஈராண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

லால்பேட்டை இனைய தளம்

நன்றி தமிழ் முரசு