ஆப்கானிஸ்தானில் பலியான இங்கிலாந்து ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது

June 10, 2008

lankasri.comஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகளை முற்றிலும் ஒடுக்குவதற்காக அந்த நாட்டில் அமெரிக்க, இங்கிலாந்து உள்பட நேட்டோ நாடுகளின் ராணுவம் அங்கு நிறுத்தப்பட்டு உள்ளது. 2001-ம் ஆண்டு முதல் அமெரிக்க, இங்கிலாந்து ராணுவ வீரர்கள் அந்த நாட்டில் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

தலீபான் தீவிரவாதிகளும் தற்கொலை தாக்குதல் மற்றும் கண்ணி வெடி தாக்குதல் ஆகியவை மூலம் ராணுவ வீரர்களை பழிவாங்கி வருகிறார்கள்

இந்த தாக்குதல் மூலம் ஏற்கனவே இங்கிலாந்து ராணுவ வீரர்கள் 97 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை ஹெல்மண்ட் மாநிலத்தில் சாங்கின் பள்ளத்தாக்கு என்ற இடத்தில் 4 ராணுவ வீரர்கள் முகாமுக்கு திரும்பிகொண்டு இருந்தபோது, ஒரு தீவிரவாதி தன் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான். இதில் 4 ராணுவ வீரர்களும் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்த ராணுவ வீரர்கள் உடனடியாக முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு போய்ச்சேர்ந்ததுமே, ஒரு வீரர் இறந்து போனதாக அறிவிக்கப்பட்டது. மற்ற 2 பேரும் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்கள். ஒருவர் மட்டும் பிழைத்துவிடுவார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். பலியான 3 பேரையும் சேர்த்தால் இதுவரை மொத்தம் பலியான இங்கிலாந்து ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது.

அவர்கள் மரணம் அவர்கள் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. ராணுவ மந்திரி டெஸ் பிரவுனி பலியான 3 வீரர்களின் குடும்பத்துக்கு தன் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொண்டார்.

இன்னொரு நாட்டுக்காக தங்கள் நாட்டினர் 100 பேரை இழந்ததை இங்கிலாந்து நாட்டு மக்கள் விரும்பவில்லை. ஹெர்ட்ஸ் மாநிலத்தை சேர்ந்த ஆண்டனி பிலிப்சன் கூறுகையில், ஆட்சியாளர்கள் வியட்னாமில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை. கொரில்லா தீவிரவாதிகள் ராணுவ சீருடை அணிவது கிடையாது. அவர்கள் மரங்களின் பின்னால் ஒளிந்து கொண்டிருப்பார்கள். விரும்பியபோது வெளியே வந்து சண்டை போடுவார்கள். அவர்களுடன் சண்டை போடுவது நேரத்தையும், உயிரையும் வீணடிப்பது ஆகும் என்று குறிப்பிட்டார்.


விஜயகாந்துடன், சரத்குமார் இணைய முடிவு?

June 10, 2008

சென்னை: நடிகர் விஜயகாந்தின் தே.மு.தி.கவுடன் கூட்டணி சேர வாய்ப்பு வந்தால், அவருடன் பேச தயாராக இருப்பதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசியலில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என்ற ஒருமித்த கருத்து உள்ளவர்கள், ஒன்றாக சேருவதில் தவறு எதுவும் இல்லை என்று தெரிவித்தார். தே.மு.தி.க. கட்சியுடன் கூட்டணி சேர வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், அவருடன், தான், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக அவர் கூறினார். தி.மு.க. அரசை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சிப்பதை தான், வரவேற்பதாகவும், அதேசமயம், அவர் கூட்டணியில் இருந்து விலகி வந்து, தமிழக அரசை விமர்சிக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு மூலமாக கர்நாடக அரசிடம் ஒப்புதல் வாங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

                                                             லால்பேட்டை இனைய தளம்


இந்தியர்கள் 3 பேருக்கு சிறைத் தண்டனை

June 7, 2008
லண்டன் ஜுன்-06.  300 மில்லியன் பவுண்ட்கள் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் உள்ள வங்கிகளில் மோசடி செய்த 3 இந்தியர்க ளுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வீரேந்திர ரஸ்தோகி, ஆனந்த் ஜெயின் மற்றும் கவுதம் மஜும்தார் ஆகியோர் உலகளாவிய அளவில் உலோக வர்த்தக சாம்ராஜ்யம் நடத்தப் போவதாக கூறி இந்த மோசடியில் ஈடுபட்டனர்.

இவர்கள் மூவரும் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் உள்ள வங்கிகள், உலோக வர்த்தக நிறுவனங்கள் மற்றும் மதிப்புமிக்க கணக்கீட்டு நிறுவனங்களை நம்பவைத்து மோசடி செய்ததாகவும், அவர்கள் பல ஆண்டுகளாக நேர்மையற்ற முறையில் திட்டமிட்டு நடந்து கொண்டதாகவும் தெரியவந்ததை அடுத்து அவர்களுக்கு லண்டனில் உள்ள சவுத்வார்க் கிரௌன் நீதிமன்றம் நேற்று தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

சண்டே டைம்ஸ் நடத்திய ஆய்வில் மிகப்பெரிய பணக்காரர் பட்டியலில் இடம்பிடித்திருந்த ரஸ்தோகிக்கு ஒன்பதரை ஆண்டுகளும், ஆனந்த் ஜெயி னுக்கு எட்டரை ஆண்டுகளும், மஜும்தாருக்கு ஏழரை ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி ஜேம்ஸ் வாட்வர்த் தீர்ப்பளித்தார்.

இதுதவிர அவர்கள் மூவரும் எந்த நிறுவனத்திலும் இயக்குனர் பொறுப்பு வகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

                                                                    லால்பேட்டை இனைய தளம்        


பிரிட்டனில் இந்தியத் தொழிலாளர்கள் கைது.

June 7, 2008
பிரிட்டன் ஜுன்-07. பிரட்டனில் வேலை உரிமை பெறாத 16 இந்தியத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தென் மேற்கு இங்கிலாந்தின் ஈவ்ஷாம் என்னுமிடத்திலுள்ள பண்ணை ஒன்றில் பணிபுரிந்து வந்த 12 பெண்கள் உட்பட 16 இந்தியர் களை அந்நாட்டு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தங்கள் நாட்டில் வேலை செய்வதற்கான உரிமம் அவர்களிடத்தில் இல்லாத காரணத்தால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

                                                     

மேலும் அவர்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அயல் நாட்டிலிருந்து தங்கள் நாட்டில் வந்து வேலை செய்பவர்களின் அடையாள அட்டை மற்றும் குடியுரிமை சான்றிதழ் போன்றவற்றை சரிபார்க்கும் அதிகாரிகள் தங்கள் பணியை மேற்கொண்டபோது சட்ட ரீதியாக வேலை செய்ய உரிமை இல்லாத வெளிநாட்டவர்கள் பணியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் பிரிட்டனில் பணிபுரிய சட்ட உரிமை பெறாத வெளி நாட்டு வேலையாட்களுக்கு வாய்ப்பு அளித்த வேலைவாய்ப்பு நிறுவனத்தைச் சேர்ந்த மேலாளருக்கு இது குறித்து எச்சரிக்கப்பட்டதோடு இங்கிலாந்து பண மதிப்பில் அவருக்கு 1,70,000 பவுண்ட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இங்கிலாந்து எல்லை ஏஜென்சியைச் சேர்ந்த அப்பகுதி நிர்வாக இயக்குநர், பணி உரிமை பெறாத வெளி நாட்டவர்கள் சட்ட விரோதமாக இங்கு தங்கிடாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் சட்ட விரோதமாக இங்கு பணியிலிருப்பவர்கள் இங்கிலாந்திலிருந்து உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்றும் பணியாற்றும் உரிமையுள்ளவர்களுக்கு மட்டுமே முனைவோர்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பணியாற்றும் உரிமை குறித்த விஷயத்தை விளையாட்டாக எடுத்துக்கொண்டு தவறு செய்பவர்கள் மீது வழக்கு தோடரப்படுவதோடு அபராதமும் விதிக்கப்படும் என்றும் அந்த அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

                                                             லால்பேட்டை இனைய தளம்


ஒரே பள்ளியில் 9 ஜோடி இரட்டையர்கள்

June 5, 2008

உலக முழுவதும் மில்லியன் கணக்கான சிறார்கள் பசிக் கொடுமையால் படாதபாடு படுகிறார்கள்.

June 5, 2008

உலக முழுவதும் மில்லியன் கணக்கான சிறார்கள் பசிக் கொடுமையால் படாதபாடு படுகிறார்கள்.
அத்தகைய சிறுவர்களின் அவலத்தையும் வறுமையையும் உலகுக்கு எடுத்துச் சொல்லி உணர்த்துவதற்காக சிங்கப்பூரர் களின் கால்கள் நேற்று நடந்தன.
சிறார் பசி தீர நிதி திரட்டு வதும் அந்தப் பெருநடையின் முக்கிய நோக்கம்.
பாசிர் ரிஸ் பூங்காவில் 1,000 பேருக்கும் அதிக சிங்கப்பூரர்கள் பெருநடையில் ஈடுபட்டார்கள்.
டிஎன்டி நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்தப் பெருநடை நிகழ்ச்சி, இந்த ஆண்டில் ஏழு நாடுகளில் இடம்பெற்றது.
உலகில் ஒவ்வோர் ஐந்து நிமிடங்களுக்கும் ஒரு பிள்ளை பசி காரணமாக அல்லது பசித் தொடர்புடைய காரணங்களுக் காக மரணமடைகிறது என்று ஒரு கணக்கு தெரிவிக்கிறது.
“உலக உணவு திட்டத்திற்கு நிதித் திரட்டுவது இந்தப் பெரு நடையின் சிறப்பு நோக்கம்” என்று டிஎன்டி சிங்கப்பூர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு டேமியன் டான் சொன்னார்.
கம்போடியாவில் பள்ளிக்கூட உணவுத் திட்டத்திற்குப் ஆதரவு வழங்குவதை முதல் பணியாகக் கொண்டுள்ளோம் என்றார் அவர்.
நிதித் திரட்டுவது ஒரு புறம் இருக்க, சிறார் பசிக் கொடுமையை நிறுவனங்களின் உதவியுடன், பொது மக்களின் புரிந்துணர்வுடன் துடைத் தொழிக்க வேண்டும் என்பது இலக்கு என்றார் அவர்.
நேற்று சிங்கப்பூரில் நடை பெற்ற நிகழ்ச்சியில் பொங்கோல், ஈஸ்ட் கோஸ்ட், ஹோங் கா தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த வசதி குறைந்த 100 மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் ஆதரவைப் புலப்படுத்தினர்.
உலகில் பசியால் சுமார் 850 மில்லியன் பேர் பாதிக்கப் படுவதாகவும் அவர்களில் 400 மில்லியன் பேர் சிறார்கள் என்றும் ஐநா நிறுவனம் தெரிவிக்கிறது.
சிங்கப்பூர் பெருநடையில் ஐநா உலக உணவுத் திட்டத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி திருமதி சிந்தியா ஜோன்சும் கலந்து கொண்டார்.
நேற்றைய நிகழ்ச்சி மூலம் கம்போடிய மாணவர் உணவுத் திட்டத்திற்காக 60,000 வெள்ளி திரட்டப்பட்டது.
இந்த உலக பெருநடை நிகழ்ச்சி, நியூசிலாந்தில் தொடங்கி 24 மணி நேரத்தில் கனடாவில் முடிவடைந்தது.

www.lalpet.com

Thanks Tamilmurasu

 

 

 

 


பாகிஸ்தான் நேரத்தில் மாற்றம்

June 3, 2008

பாகிஸ்தான் அரசு தங்களது நாட்டு நேரத்தை மாற்றியமைத்துள்ளது.

அதாவது 8 மணி இனி மேல் 9 மணியாகக் கருதப்படும் என அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் எரிபொருள் விலை உயர்ந்து வருவதால் எரிபொருள் சிக்கனத்தைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

புதிய நேரம் ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்து அமலுக்கு வந்தது. பாகிஸ்தான் அரசின் இந்த நடவடிக்கையால் திங்கள்கிழமை நேரத்தைச் சரியாகக் கணிக்க முடியாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

திங்கள்கிழமை அன்று அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் நேரம் மாற்றப்பட்டதை மறந்து வழக்கப்படிச் சென்றனர். இதனால் அவர்கள் ஒரு மணி நேரம் தாமதமாகச் சென்றடைந்தனர்.

இதனிடையே, நேரமாற்றம் குறித்தத் தகவலை மக்கள் மத்தியில் அரசு சரியாகக் கொண்டுபோய் சேர்க்கவில்லை என்றும் பெரும்பாலானோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

www.lalpet.com

Thanks webdunia


சீனாவில் 1.5 கோடி இளைஞர்களுக்கு புகையிலை பழக்கம்

June 3, 2008

சீனாவில் 1.5 கோடி இளைஞர்கள் புகையிலை பொருள்கள் உபயோகிக்கும் பழக்கத்துக்கு ஆளாகியுள்ளதாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சர்வதேச புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, கடந்த சனிக்கிழமை சீன அரசின் புகையிலை கட்டுப்பாட்டுத் துறை வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

www.lalpet.com

Thanks webdunia


அ‌க்டோப‌ர் 2 முத‌ல் நாடு முழுவது‌ம் புகை‌பிடி‌‌க்க‌த் தடை: அமை‌ச்ச‌ர் அ‌ன்பும‌ணி!

June 1, 2008

நமதநாடமுழுவது‌மவரு‌கிஅ‌க்டோப‌ர் 2 ஆ‌மதே‌தி முத‌லபொதஇட‌ங்க‌ளி‌லபுகை‌பிடி‌க்க‌ததடை ‌வி‌தி‌க்க‌ப்படு‌மஎ‌ன்றம‌த்‌திசுகாதாஅமை‌ச்ச‌ரமரு‌த்துவ‌ரஅ‌ன்பும‌ணி ராமதா‌ஸஅ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடந்த, ‘புகையிலை தீமையிலிருந்து இளைஞர்களை காப்போம், புகையிலை வணிக வலையை அறுத்தெறிவோம்’ என்ற கருத்தை மையமாகக் கொண்ட உலக புகையிலை எதிர்ப்பு தின விழாவில் பே‌சிய அமை‌ச்ச‌ர் அ‌ன்பும‌ணி, “அக்டோபர் மாதம் 2ஆ‌ம் தேதி முதல் இந்தியாவில் பொது இடத்தில் புகை பிடிப்பது தடை செய்யப்படும். விடுதி, வரவேற்பு அறை, ரயில் நிலையங்கள், தனியார், பொதுத்துறை நிறுவனங்கள் உள்பட எங்கும் புகை பிடிக்கக்கூடாது.

அப்படி புகைபிடிக்க வேண்டும் என்றால் தெருவிற்கு சென்றோ, வீட்டிற்கு சென்றோதான் புகைபிடிக்க வேண்டும். அக்டோபர் 2ஆ‌ம் தேதி முதல் யாராவது எங்காவது புகைபிடித்தால் அவரை அந்த இடத்தில் இரு‌ந்து வெளியேற்றுவது உங்கள் கடமை ஆகும்” எ‌‌‌ன்றா‌ர்.

பொது இடங்களில் புகைபிடிக்கக் கூடாது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ புகையிலைகளை விளம்பரம் செய்யக்கூடாது. புகையிலை பொருட்களை கல்லூரிகளில் இருந்து 100 மீட்டர் தொலைவில்தான் விற்பனை செய்ய வேண்டும் என்ற சட்டம் கட‌ந்த 3 ஆண்டுகளாக காகிதத்தில் இருக்கிறது.

பொது இடத்தில் புகைபிடிக்கக் கூடாது என்ற சட்டத்தை எந்த மாநில அரசும் அமல்படுத்துவது போல‌த் தெரியவில்லை. எனவே சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. புகையிலை கட்டுப்பாடு ஆணையம் தயார் செய்து வரும் பு‌திய ச‌ட்ட‌ம் நாடாளுமன்றத்தில் தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட‌த் தயாராக உள்ளது.

ப‌ள்‌ளி, க‌ல்லூ‌ரி ஆசிரியர்க‌ளி‌ல் 22 ‌விழு‌க்கா‌ட்டின‌ர் புகைபிடிக்கி‌ன்றன‌ர் என்று ஆய்வு கூறுகிறது. எனவே பள்ளி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது” எ‌ன்றா‌ர் அமை‌ச்ச‌ர் அ‌ன்பும‌ணி.

www.lalpet.com

Thanks webdunia


இ‌ந்‌‌திய‌த் தொ‌ழிலாள‌ர்களை ஏமா‌ற்‌றியவ‌ர்க‌ளி‌ன் ‌மீது நடவடி‌க்கை: பிரதமருக்கு வைகோ கடிதம்!

June 1, 2008

இ‌ந்‌தியத் தொ‌ழிலாள‌ர்களை ஏமா‌ற்‌றி அமெ‌ரி‌க்கா‌வி‌ற்கு அனு‌ப்‌பிய ‌நிறுவன‌‌த்‌தி‌ன் ‌மீது கடு‌ம் நடவடி‌க்கை எடு‌ப்பதுட‌ன், அ‌ந்த‌த் தொ‌ழிலாள‌ர்களு‌க்கு உ‌ரிய இழ‌ப்‌பீ‌ட்டை பெ‌ற்று‌த்தர வே‌ண்டு‌ம் எ‌ன்று ம‌த்‌திய அர‌சிட‌ம் ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவ‌ர் எழு‌தியு‌ள்ள கடிதத்தி‌ன் ‌விவர‌ம் வருமாறு:

மும்பையைச் சேர்ந்த திவான் கன்சல்டன்சி என்ற சட்ட விரோத பணியமர்த்தும் நிறுவனத்தால், இந்திய இளைஞர்கள் நயவஞ்சமாக ஏமாற்றப்பட்டு உள்ளார்கள். இந்த நிறுவனம், நிறைய சம்பளத்தோடு அனைத்து வசதிகளுடன், அமெரிக்காவில் நிரந்தர வேலை வாய்ப்பை பெற்று‌த் தருவதாகப் பொய்யான வாக்குறுதிகளுடன் விளம்பரம் செய்து சென்னையிலும் மற்ற நகரங்களிலும் 2006-ஆம் ஆண்டு போலியான நேர்முகத் தேர்வையும் நடத்தி இருக்கிறது.

இந்த போலி நிறுவனத்தின் கட்டாயத்தின் பேரில் வேலைவாய்ப்புக்காக சுமார் 600பேர் தலா ரூ.6 லட்சம் கொடுத்‌திருப்பதுடன் அவர்கள் நீட்டிய காகிதங்கள் அனைத்திலும் கையெழுத்து இட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அமெரிக்கா அழைத்து செல்லப்பட்டு அங்கு நியூ ஆர்லியன்ஸ்சில் உள்ள சிக்னல் என்ற சர்வதேச நிறுவனத்தில் வேலைக்கு சேர்க்கப்பட்டார்கள்.

அ‌ங்கு அவர்க‌ள் பேரதிர்ச்சி அடையும் வகையில் மனிதாபிமானமற்ற முறையில் மிகக் கொடுமையான வேலை கொடுக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல், தங்கு‌மிட வசதிகள் எதுவுமின்றி ஆடு, மாடுகளை அடைப்பது போல நீண்ட சரக்கு லாரிகளில் படுக்கைகளைப் போட்டு தங்கவைத்‌திருக்கின்றனர். ஒருவழியாகச் சமாளித்து அந்த நிறுவனத்தின் பிடியி‌லிருந்து இவர்கள் தப்பியுள்ளனர்.

பாதுகாப்பு கோரியும், நீதி வேண்டியும் அவர்கள் மே மாதம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் இருந்து வாஷிங்டன் வரை நடைபயணம் மேற்கொண்டனர்.

அவர்களில் 17 பேர் மே 14ஆம் தேதி வாஷிங்டனில் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை முன்பு அமைதியான வழியில் உண்ணா நோன்புப் போராட்டம் மேற்கொண்டனர். 10 நாட்களுக்கு பிறகு இந்த உண்ணா நோன்பில் கலந்து கொண்ட போராட்டக்காரர்களின் உடல்நிலை மிகவும் மோசமானது.

மே 25 ஆ‌ம் தேதி பட்டினிப் போராட்டக்காரர்களின் குழு ஒன்று, அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ரோனனை சந்தித்து இந்திய அரசின் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், இந்திய தூதர் 15 நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்ட அவர்களது கோரிக்கை விண்ணப்பத்தை அதுவரை தாம் பார்க்கவில்லை என்று போராட்டக்காரர்களிடம் தெரிவித்ததாக எனக்கு தெரியவருகிறது. இந்திய‌த் தூதரின் இதுபோன்ற செயல்பாடுகள், அவரது அலட்சியப் போக்கையும், அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் நலன்களில் துளியும் அக்கறை இல்லாத இரக்கமற்ற தன்மையையும் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

பாதிக்கப்பட்ட இந்தியர்கள் தொடர்ந்து அமெரிக்காவில் தங்கி‌யிருந்து நீதிமன்றங்களில் தங்களுடைய வழக்குகள் தொடர்பாக வாதாடுவதற்கு உதவியாகவும், அந்த நிறுவனத்திடம் இருந்தும் அவர்களைப் பணியில் அமர்த்திய சட்டவிரோத கும்பலிடம் இருந்தும் போதிய ஈட்டுத் தொகையைப் பெறும் வகையிலும், தொழிலாளர்களை ஏமாற்றியவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டியும், தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு வைகோ வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்துள்ளார்.

www.lalpet.com

Thanks webdunia