கடந்த 60 ஆண்டுகளாக சீனாவுக்கும் தைவானுக்குமிடையே இல்லாமல் இருந்த விமான போக்குவரத்து நேற்று மீண்டும் துவங்கப்பட்டது.


பெய்ஜிங் : கடந்த 60 ஆண்டுகளாக சீனாவுக்கும் தைவானுக்குமிடையே இல்லாமல் இருந்த விமான போக்குவரத்து நேற்று மீண்டும் துவங்கப்பட்டது. முதல் விமானம் தெற்கு சீனாவில் இருக்கும் குவாங்ஜோவ் என்ற நகரில் இருந்து தைவான் தலைநகர் தைபே விமான நிலையத்தை சென்று அடைந்தது. சீனாவுக்கும் தைவானுக்குமிடையே வாரத்தில் 36 விமானங்கள் ( வெள்ளியில் முதல் திங்கள் வரை மட்டும் ) இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் விமானத்தில் 100 சுற்றுலா பயணிகள் உள்பட 250 பேர் பயணம் செய்தனர். 1949 ம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டு போரினால் இரு நாடுகளும் தனித்தனியாக பிரிந்தன. அதன் பின் இரு நாடுகளுக்குமிடையே நேரடி விமான போக்குவரத்து இல்லாமல் இருந்தது. சீனாவில் இருந்து தைவானுக்கு போகவேண்டும் என்றால் வேறு நாடு வழியாகத்தான் போகவேண்டும் என்ற நிலைதான் கடந்த 60 வருடங்களாக இருந்தது. சில முக்கிய விடுமுறை நாட்களில் மட்டும் நேரடி விமானம் இயக்கப்பட்டது. கடந்த மே மாதத்தில் தைவானின் புதிய அதிபராக யிங் – ஜியோவ் பொறுப்பேற்ற பின் சீனாவுடனான உறவில் முன்னேற்றம் காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இப்போது நேரடி விமான சர்வீஸ் துவங்கப்பட்டுள்ளது.

லால்பேட்டை இனைய தளம்

நன்றி தினமலர்

Leave a Reply